இந்தியா, ஏப்ரல் 18 -- பூண்டு காரக் குழம்பை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட்டீர்கள் என்றால் சுவை அள்ளும். இதற்கு தொட்டுக்கொள்ள பெரிதாக எதுவுமே தேவைப்படாது. அப்பளம் அல்லது ஆம்லேட் இருந்தாலே போதும். இதைச் செய்வதும் எளிது. சுவையும் நன்றாக இருக்கும். இது குறிப்பாக சமையல் கற்றுக்கொள்பவர்களுக்கு மிகவும் ஏற்றது. இது நீண்ட நாட்கள் கெடாது. இந்த பூண்டுக்குழம்பை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* நல்லெண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* வெந்தயம் - கால் ஸ்பூன்

* சின்ன வெங்காயம் - 10

* பூண்டு - 30 பல்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - ஒன்றரை ஸ்பூன்

* புளி - எலுமிச்சை அளவு (சூடான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, கரைத்து பிழிந்துகொ...