இந்தியா, மே 29 -- பூசம் நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம். அதன் அதிபதி சனிபகவான். பூசம் நட்சத்திரம் கடக ராசியில் முழுமையாக இடம்பெற்றிருக்கும். கடக ராசியில் 106 பாகை 40 கலையில் (106.40 டிகிரி) அமைந்துள்ளது. பூசம் நட்சத்திரத்தின் அதிதேவதை தட்சிணாமூர்த்தி. தெய்வம் குரு. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தட்சிணாமூர்த்தியையும், அரசமரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமாகவும், ஆண் ஆடு, காகம் இவற்றிற்கு தீங்கு விளைவிக்காமல் இருந்தாலும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம்.

அரச மரம் விருட்சம் ஸ்தலமாக உள்ள கோயில்களுக்கு செல்லலாம். ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீபுவாசகன், மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள், வண்டியூர் பேச்சியம்மன், அகரம் முத்தாலம்மன், கோயம்புத்தூர் சோனியம்மன், இலும்பை மாகாளேஸ்வரர், பேரூர் பட்டீஸ்வரர் ஆகிய கோயில்களுக்கு சென்று வழிபடலாம்.

இதையும்...