இந்தியா, ஏப்ரல் 23 -- தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை வானுயர்ந்த கம்பீரமாக காணப்படுகின்றன. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு தலபுராணம் இருக்கின்றது. அதனைப் பொருத்தே அந்த கோயில் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

அந்த வகையில் அனைத்து கோயில்களும் சிறப்பு மிகுந்த கோயில்களாக திகழ்ந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் திருவைக்காவூர் அருள்மிகு வில்வவனேஸ்வரர் திருக்கோயில்.

சிவபெருமானுக்கு மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் திருநாளாக மகா சிவராத்திரி திருநாள் விளங்கி வருகின்றது. இந்த மகா சிவராத்திரி திருநாள் பிறந்த இடமாக இந்த திருக்கோயில் விளங்கி வருகிறது.

மேலும் படிங்க| ராகு பகவானின் அ...