சென்னை,திருநெல்வேலி,தூத்துக்குடி,கன்னியாகுமரி, மார்ச் 16 -- தாமிரபரணி ஆற்றில் அதிகம் உள்ள உலோகங்களால் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு அனைத்து உறுப்புகளிலும் புற்றுநோய் அதிகரித்துள்ளது ஆய்வுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவர் புகழேந்தி கூறியுள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு கொடுத்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ள விவரங்கள்

தமிழ்நாடு பட்ஜெட் உரையில் தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது என்று வருத்தத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 6 சதவீதம் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்குத்தான் இது அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் 2024 புள்ளிவிவரப்படி தமிழகத்தில் 96,500 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்து...