இந்தியா, மார்ச் 28 -- தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் உள்ள குடிநீர் ஆதாரங்களில் உள்ளதைப்போலவே நொய்யல் ஆற்றங்கரையோரங்களில் உள்ள குடிநீர் ஆதாரங்களிலும் ஹெவி மெட்டல்கள் அதிகம் உள்ளது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு புற்று நோய்கள் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அப்பாவி மக்களைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் மருத்துவர் புகழேந்தி கூறியதாவது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுஜிதா, பிரபு மற்றும் சிந்து ஆகிய மூவரும் தாமிர பரணி ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தங்கள் ஆய்வில் வெளியிட்டிருந்தனர். இதே மூவர் குழு தமிழகத்தின் நொய்யல் ஆற்றங்கரையில் ...