இந்தியா, மார்ச் 30 -- இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் மருத்துவர் புகழேந்தி கூறியிருப்பதாவது

தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு 2012ம் ஆண்டுக்குப்பின்னர் அதிகரித்து வருவது பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரை மற்றும் நொய்யல் ஆற்றங்கரை ஆகிய இடங்களில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகம் உள்ளது என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதற்கு முக்கிய காரணமாக தொழிற்சாலைகள் மற்றும் அதிலிருந்து வெளியேறும் கழிவுகள்தான் என்று அறிவியல் ஆய்விதழ்களில் கட்டுரைகள் வெளியாகியுள்ளது. சுஜிதா, சிந்து, பிரபு ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வுகளை நடத்தி விவரங்களை தெரிவித்துள்ளனர். சென்னை பப்ளிக் ஃபோரம் இத்ததகவலை வெளியிட்டுள்ளது.

இவர்கள் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஆய்வுகளை நடத்தியுள்ளனர். பாலாறு மற்றும் தென்பெண்ணை...