இந்தியா, ஜூன் 16 -- தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வருபவர் அஜிதா ஆக்னல். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டதில் இருந்து களப்பணி மற்றும் சமூக ஊடகங்களில் பம்பரமாக சுழன்று வரும் இவருக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்துக்கும் தற்போது மோதல் போக்கு நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மேடையிலேயே எதிரொலித்தது தான் தற்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தவெகவின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அஜிதாவுக்கு பொதுக்குழுவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோல் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியிலும் அஜிதா ஆக்னல் புறக்கணிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை கவுர...