இந்தியா, மே 25 -- புனர்பூசம் நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் ஏழாவது நட்சத்திரம். அதன் அதிபதி குரு பகவான். குருவின் ஆதிக்கம் கொண்ட புனர்பூசம் நட்சத்திரம் மிதுனம் மற்றும் கடக ராசியில் இடம்பெற்றிருக்கும்.

அதாவது புனர்பூசம் நட்சத்திரத்தின் 1, 2, 3 பாதங்கள் மிதுன ராசியிலும், 4-ம் பாதம் கடக ராசியிலும் அமைந்துள்ளது. இதனால் புனர்பூசம் நட்சத்திரத்தை கால் இல்லா நட்சத்திரம் என்று ஜோதிடத்தில் குறிப்பிடுவார்கள். மிதுன ராசியில் 10 பாகையும், கடக ராசியில் 3 பாகை 20 கலையும் அமைந்துள்ளது. புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிதேவதை ஸ்ரீராமர். தெய்வம் அதிதி. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிதி அம்மனையும், ஸ்ரீராமரையும் வழிபட வேண்டும். மூங்கில் மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமாகவும், யானை, பெண் பூனைகளுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதாலும் வாழ்க்கையில் முன்னே...