இந்தியா, மே 11 -- உடனடியாக உங்கள் மனநிலையை உற்சாகமாக்கும் காரணிகள் என்னவென்று பாருங்கள். ஒவ்வொருவருக்கும் மோசமான நாட்கள் வரத்தான் செய்யும். ஆனால், அது உங்கள் முழு வாழ்க்கையையும் வரையறுக்கக் கூடாது. சில எளிய வழிகளில் நீங்கள் உங்கள் நாளை சிறப்பாக்கலாம். உங்கள் அமைதியை நீங்கள் மீண்டும் கொண்டுவரலாம். நேர்மறை எண்ணங்களால் நிரப்பலாம். அதற்கான வழிகள் என்னவென்று பாருங்கள்.

ஒரு கடினமான நாள் என்றால் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு, வெளியே ஒரு நடையை மேற்கொள்ளுங்கள் அல்லது பால்கனியில் அமர்ந்துகொண்டு புதிய காற்றை சுவாசியுங்கள். இது உங்கள் மனதுக்கு புத்துணர்வு தரும். இயற்கை, சூரிய ஒளி மற்றும் சிறிய இடப்பெயர்வு என உங்கள் மோசமான நாளில் உங்களுக்கு புத்துணர்வு தருவதாக அமையும். உங்களின் மனநிலையை மேம்படுத்தி, மனஅழுத்தத்தைக் குறைக்கும்.

உடலில் நீர்ச்சத்துக்கள்...