இந்தியா, மே 8 -- புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தமிழக அரசின் கல்விப் பாடத்தைப் பின்பற்றும் தனியார் பள்ளிகளில் மட்டும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 08) வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்ட தேர்ச்சி முடிவுகளில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவிதம் 98.53% என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025-ல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகளில் மொத்தம் 7,564 மாணவர்கள் தேர்வு எழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவுகளின் படி தனியார் பள்ளிகளில் பயின்ற 7453 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 3794 மாணவர்களும் 3659 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் தனியார் பள்ளி ஒட்டுமொத்த தேர்ச்சி 98.53 சதவீதம் ஆ...