இந்தியா, ஏப்ரல் 4 -- இந்தியாவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய கண்டங்களில் இருந்து வந்த வெள்ளையர்கள் ஆட்சி செய்தனர். அப்போது அங்கிருந்து ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக் காரர்கள் என பல விதமானோர் இந்தியாவில் வந்து குடியேறி, இங்கு இருக்கும் மக்களை அடக்கி ஆண்டனர். அதனையடுத்து பல போராட்டங்களுக்கு பின்னர் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. அந்த ஆட்சியில் பிரெஞ்சு ஆதிக்கம் அதிகமாக இருந்த இடம் தான் பாண்டிச்சேரி, இது இந்தியா எனும் நாடு உருவான போது தனி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இது தனி பிரதேசமாக இருந்தாலும் இங்கும் தமிழே ஆட்சி மொழியாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் நகரங்களால் சூழப்பட்ட இங்கு தமிழ் பாரம்பரியமே மேலோங்கி இருக்கிறது. இங்கு பல உணவுகள் பிரபலமாக உள்ளன. இந்த வரிசையில் புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பக...