புதுச்சேரி,காரைக்கால்,புதுவை,பாண்டிச்சேரி, பிப்ரவரி 26 -- புதுச்சேரி புதிய பேருந்து நிலையம்: புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி பெயரை வைக்க வேண்டும் எனக் கூறி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரணி நடத்தினர். சட்டமன்றத்தை நோக்கி சென்ற பேரணியின் நிறைவில், முதலமைச்சர் மற்றும் துணை நிலை ஆளுநருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

புதுச்சேரி நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, 1980-களில், மறைமலை அடிகள் சாலையில், புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ராஜீவ்காந்தி பேருந்து நிலையம் காலப்போக்கில் கடும் இடநெருக்கடியை சந்தித்தது. இதை இடித்துவிட்டு, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையம் கட்ட திட்டமிடப்பட்டது. இப்பணி கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது...