இந்தியா, பிப்ரவரி 27 -- சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் புதுச்சேரி கிட்டதட்ட 200 ஆண்டுகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பின்னர் 1954 ஆம் ஆண்டு புதுச்சேரியை இந்தியாவிடம் ஒப்படைத்தது பிரான்ஸ். புதுச்சேரி விடுதலை பெற்று 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் பிரெஞ்சுக்காரர்கள் விட்டு சென்ற பாரம்பரிய உணவு முறை இன்றளவும் அங்கு வழக்கத்தில் உள்ளது. குறிப்பாக சாலட் நிக்கோஸ், பேத் தி பியோ கிராஸ், கிரீஸ் கேரமால், பிரஞ்சு பிங்கர் உள்ளிட்டவை புதுச்சேரியில் இன்றைக்கும் கிடைக்கும் நவீன உணவு வகைகளாக மாறிப்போய் இருக்கின்றன. அதிலும் இன்றளவும் சுற்றுலா பயணிகள், உணவு பிரியர்கள், பொதுமக்கள் அதிகம் உண்ணும் உணவாக இருக்கிறது 'பிரஞ்சு ஆம்லெட்'. இதற்கு 'முட்டை பிரட்டல்' என்ற பெயரும் உண்டு.

நம்மூரில் முட்டையை வைத்து பல உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. க...