இந்தியா, ஏப்ரல் 11 -- Budhaditya Yoga: நவகிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சூரிய பகவான் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார். அன்றைய தினம் தமிழ் புத்தாண்டான சித்திரை மாதம் பிறக்கின்றது.

இதன் காரணமாக விசுவாவசு தமிழ் புத்தாண்டு பிறக்க உள்ளது. அதேசமயம் மே மாதத்தில் புதன் பகவான் மேஷ ராசிக்கு செல்கின்றார். இதன் காரணமாக மேஷ ராசியில் புதன் மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் சேர உள்ளனர். புதன் மற்றும் சூரியன் சேர்க்கின்ற காரணத்தினால் புதாதித்ய ராஜயோகம் உருவாக உள்ளது.

இந்த சக்தி வாய்ந்த யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பிடம் சூரியன் புதன் ...