இந்தியா, ஏப்ரல் 17 -- புதன் இரட்டை பெயர்ச்சி: ஜோதிட சாஸ்திரத்தின் படி நகப்பிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது நிலைகளை மாற்றுவார்கள். இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சில நேரங்களில் நவகிரகங்கள் பயணம் செய்யும்பொழுது ஒரு கிரகத்தோடு மற்றொரு கிரகம் இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் மே மாதத்தில் இரண்டு முறை இடமாற்றம் செய்கின்றார். மே மாதம் ஏழாம் தேதி அன்று புதன் பகவான் மேஷ ராசியில் நுழைகின்றார். அதன் பின்னர் மே மாதம் 23ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்கின்றார்.

புதன் பகவானின் இரட்டை இடப்பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது....