இந்தியா, ஏப்ரல் 17 -- புதன் சுக்கிரன்: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் சில நேரங்களில் இடம் வரும்பொழுது ஒரு கிரகத்தோடு ஒரு கிரகம் இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

அந்த வகையில் தற்போது மீன ராசியில் இரண்டு ராஜ யோகங்கள் உருவாகியுள்ளன. சுக்கிரன் மற்றும் புதன் இருவரும் மீன ராசியில் ஒன்றிணைந்து லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்கியுள்ளனர். ஏற்கனவே மீன ராசியில் சுக்கிரன் இருக்கின்ற காரணத்தினால் மாளவ்ய யோகம் உருவாக்கியுள்ளது.

50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரண்டு யோகங்களும் உருவாக்கியுள்ளன. இது ராஜயோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திர...