இந்தியா, மார்ச் 14 -- புதன் உதயம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள் ராசி மாற்றம் மற்றும் நட்சத்திர மாற்றம் செய்யும் கிரகங்களால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஞானம் மற்றும் வியாபார வெற்றியை வழங்க கூடியவர் புதன் பகவான் இவர் ஏப்ரல் மாதம் மீன ராசியில் உதயம் ஆகின்றார்.

நவகிரகங்கள் சூரிய பகவானை நெருங்கும் போது அதனுடைய சக்திகள் குறையும் எனக் கூறப்படுகிறது. கிரகங்கள் சூரியனை விட்டு விலகிச் செல்லும் பொழுது அந்த கிரகங்கள் உதயமாகின்றன. அந்த வகையில் புதன் பகவானின் உதயம் சில ராசிகளுக்கு நேர்மறை தாக்கங்களையும், சில ராசிகளுக்கு எதிர்மறை தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது. இருப்பினும் புதன் பகவானின் மீனராசி உதயத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள் கு...