இந்தியா, ஜூன் 26 -- கோள்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மனித வாழ்க்கையை பாதிக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர்கிறது. அந்தவகையில், கிரகங்களின் இளவரசனான புதன் ஜூன் 25, 2025 அன்று அதிகாலை 05:08 மணிக்கு பூசம் நட்சத்திரத்தில் சஞ்சரித்திருக்கிறார். ஜூலை 6 ஆம் தேதி வரை அதே நிலையில் இருப்பார்.

பூசம் நட்சத்திரத்தின் அதிபதியாக சனி பகவான் கருதப்படுகிறார். அதேநேரம், புதன் பேச்சுத்திறன், வணிகம், நுண்ணறிவு, மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். பூசம் நட்சத்திரத்தில் புதன் சஞ்சரிப்பது சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மைகளை தரும் என்று ஜோதிடம் கூறுகிறது. இந்தக் காலகட்டத்தில் இந்த ராசிகள் வணிக ரீதியாகவும் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று...