இந்தியா, ஏப்ரல் 30 -- நடிகர் நானி மே1 அன்று தனது நடிப்பில் வெளியாக இருக்கும் படமான ஹிட்: தி தேர்ட் கேஸ் படத்தின் புரோமோஷனில் பிசியாக இருக்கிறார்.

உதவி இயக்குநராக பணியாற்றி வந்த நானி 2008ம் ஆண்டு வெளியான அஷ்ட சம்மா படத்தில் நடிகராக அறிமுகமானார். ஆனால், அவருக்கு டைரக்டர் ஆக வேண்டும் என்பதே விருப்பமாக இருந்தது. இருப்பினும் அவர் ஒரு காலக்கட்டத்தில் புகழ் தன்னை மாற்றிவிடுமோ என்று பயந்ததாக பேசி இருக்கிறார்.

பாலிவுட் பப்புல் சேனலுக்கு பேட்டிக்கொடுத்த அவர் , 'புகழ் என்னை மாற்றிவிடும் என்று நான் அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்பதை கற்றுக்கொண்டேன். நிறைய மக்கள் இதைச் சொல்கிறார்கள், இல்லையா? நான் தொடங்கியபோது எனக்கும் அதுதான் பயமாக இருந்தது. புகழ் நான் எப்படி நினைக்கிறேன் அல்லது நான் யார் என்பதை மாற்றும். ஆனால், அது என்னிடமிருந்து என்னைப் பறிக்கும...