இந்தியா, ஏப்ரல் 14 -- வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, இந்த தமிழ் புத்தாண்டு சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களையும் தரப்போகிறது. அந்தவகையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு விசுவாவசு ஆண்டு எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு வளர்ச்சிக்கான ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சனி மற்றும் ராகு பெயர்ச்சிகள் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. வேலையில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்...