இந்தியா, ஏப்ரல் 26 -- நவ கிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். ராகு பகவான் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் நுழைந்தார். ராகுபகவான் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். அடுத்த 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவர் ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும்பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. மீன ராசியில் ராகு மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் சேர்ந்து ...