இந்தியா, பிப்ரவரி 24 -- பிரான்சின் டங்கிர்க் நகரில் 15.02.2025 முதல் 22.02.2025 வரை நடைபெற்ற "41வது காப்பில் லா கிரேண்டே" சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வம் 2வது இடம் வென்றார்.

16 GM, 21 IM உட்பட 26 நாடுகளை சார்ந்த 533 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். 9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 6 வெற்றி, 3 டிரா என 7.5 புள்ளிகளுடன் இந்திய வீரர் இனியன் முதல் இடத்தை சமன் செய்தார். அதனை தொடர்ந்து டை பிரேக்கில் கிராண்ட் மாஸ்டர் இனியன் 2ம் இடம் பிடித்தார்.

பிரான்சின் IM மஹேல் முதல் இடத்தைப் பிடித்தார். மற்றொரு இந்திய கிராண்ட்மாஸ்டர் ராஜா ரித்விக் மூன்றாம் இடம் பிடித்தார்.

ஈரோட்டை சேர்ந்தவரான இனியன் முழுப்பெயர் இனியன் பன்னீர் செல்வம். இந்தியா சார்பில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 71வது வீரராக உள்ளார். தற்போது...