இந்தியா, மார்ச் 1 -- செக் குடியரசு நாட்டின் பிராக் நகரில் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா தனது முதல் வெற்றியை பெற்றுள்ளார். முன்னதாக, குரேல் எடிஸுக்கு எதிராக இரண்டாவது முறையாக டிரா செய்தார். 10 வீரர்கள் பங்கேற்றும் ரவுண்ட் ராபின் முறையிலான இந்த போட்டி பரபரப்பான நிலையில் எட்டியுள்ளது.

இதைத்தொடர்ந்து செக் குடியரசை சேர்ந்த நுயென் தாய் டாய் வான்க்கு எதிராக வெற்றி பெற்று இந்த தொடரில் தனது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம் மூன்றாவது சுற்றில் சீனாவின் டாப் சீட் வீரரான வெய் யி என்பவரை தோற்கடித்தார்.

கருப்பு காய்களுடன் விளையாடிய இந்திய கிராண்ட்மாஸ்டர், சிறப்பான டிஃபென்ஸை பயன்படுத்தி சுமூகமான வெற்றியைப் பதிவு செய...