கோவை. கோயம்புத்தூர், மார்ச் 20 -- கோவையில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த பாம்பை பிடிக்க முயன்ற பாம்பு பிடி வீரர் சந்தோஷை பாம்பு கடித்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

கோவை தொண்டாமுத்தூர் குடியிருப்புப் பகுதியில் பாம்பு ஒன்று புகுந்து இருப்பதாக தகவல் வந்தது. அந்த தகவலின் அடிப்படையில் அங்கு பாம்பு பிடிக்கும் பணிக்காக சந்தோஷ் வரவழைக்கப்பட்டார். பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த சந்தோஷை, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பாம்பு கடித்தது.

இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கடந்த 20 ஆண்டுகளாக கோவை பகுதிகளில் ராஜ நாகம் உள்ளிட்ட பல விஷ பாம்புகளை குடியிருப்பு பகுதிகளில் ...