இந்தியா, பிப்ரவரி 24 -- Budhan Yama: நவகிரகங்களில் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகங்களில் முக்கிய இடத்தை வகிப்பவர் புதன் பகவான். புதன் பகவான் ராசிமாற்றம் மட்டுமல்லாது மற்ற கிரகங்களோடு இணைந்து பல யோகங்களை உருவாக்க கூடியவர்.

அந்த வகையில் புதன் பகவான் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று எமனோடு நேருக்கு நேர் சந்திக்கின்றார். இதனால் பிரதியுதி யோகம் உருவாக உள்ளது. அந்த நேரத்தில் புதன் பகவான் கடக ராசியில் பயணம் செய்வார். எமன் மகர ராசியில் பயணம் செய்வார்.

புதன் மற்றும் எமன் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பிரதியுதி யோகத்தை உருவாக்குகின்றனர். இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்...