இந்தியா, மே 19 -- பாவக்காயில் ஐஸ்கிரீம் செய்ய முடியுமா என்று உங்களுக்கு ஆச்சர்யமாக உள்ளதா? பாவக்காயில் ஐஸ்கிரீம் செய்ய முடியும். அதுவும் கசப்பில்லாமல் எப்படி என்று தெரிந்துகொள்ளவேண்டுமா? பரிதாபங்கள் யூட்யூப் சேனலில் ஒரு வீடியோவில் ஐஸ்க்ரசம் என புதிய டிஷ்களை கிண்டல் செய்திருப்பார்கள். எனவே பாவக்காயில் ஐஸ்கிரீம் என்றவுடன் இது அதுபோல் எதுவுமோ என்று நீங்கள் பயந்துவிடவேண்டாம். பாவக்காயில் உண்மையிலே ஐஸ்கிரீம் செய்ய முடியும்.

குக் வித் கோமாளியிலும் இந்த டிஷ் பிரபலம்தான். பாவக்காயில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. சர்க்கரை நோயாளிகளின் நண்பன் என்றால் அது பாவக்காய்தான். எனவே ஐஸ்கிரீமே இனி சாப்பிட முடியாது என வருந்தும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பாவக்காய் ஐஸ்கிரீம் ஒரு வரம்தான். மேலும் கசக்கும் என்று பாவக்காயை ஒதுக்கும் குழந்தைகளுக்கு அதை ஐஸ்கிரீமாக செய...