இந்தியா, மார்ச் 15 -- நடிகரும் ஜனசேனா கட்சி தலைவரும், ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இரட்டை வேடம் போடுவதாக கடுமையாக விமர்சனம் செய்தார். தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்து லாபம் ஈட்டும் அதே வேளையில், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போலித்தனம் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: அப்பட்டமான இந்தி திணிப்பு.. நடைமுறைக்கு வந்த குற்றவியல் சட்டங்கள்.. பாஜகவை விளாசும் ஈபிஸ்

"சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. தமிழ்ப் படங்களை இந்தியில் டப்பிங் செய்து லாபம் ஈட்டும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், இந்திக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்ன நியாயம்? பாலிவுட்டில் இருந்து பணம் வேண்டும், ஆனால் இந்தி வேண்டாம் என்கிறார்கள் - இது என்ன வகையான தர்க்கம்?" என காகிநாடாவில் ...