இந்தியா, மார்ச் 9 -- 2025 ஆம் ஆண்டின் மகளிர் தினத்தை நாம் மொபைல் போன்களில் ஸ்டேட்டஸ் வைத்தும், இனிப்புகள் மற்றும் பரிசு பொருள் வழங்கியும் கொண்டாடி விட்டோம். ஆனால் உலகம் முழுவதும் பல இடங்களில் இன்றும் பெண்கள் சுதந்திரமான வாழ்க்கையை வாழ முடியாமல் தவித்து வருகின்றனர். நமது வீட்டிலும், நமது நட்பு வட்டாரத்திலும் கூட பல பெண்கள் ஆண்களால் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இவை அனைத்தும் முற்றிலுமாக மறைந்தால் மட்டுமே உண்மையான மகளிர் தினம் கொண்டாடப்படும். இந்த சூழ்நிலையில் PLOS ONE என்ற ஆய்வு இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவு பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கான காரணத்தை கட்டவிழத்துள்ளது. அது குறித்து தெளிவாக காண்போம்.

ஆணாதிக்கத்தால் வரையறுக்கப்பட்ட பாரம்பரிய பாலின பாத்திரங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகவும் கடுமையான, நீர்த்துப்போன பொறுப்புகளை ஒத...