இந்தியா, மார்ச் 15 -- பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இறுதி ஆண்டு முடித்தும் பல்வேறு காரணங்களால் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் தங்களின் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல இயலாத சூழ்நிலையினை கருத்தில் கொண்டு அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் பெற தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்து உள்ளார்.

பாலிடெக்னிக் கல்லூரி இறுதி ஆண்டு முடித்து நிலுவைப் பாடங்கள் (Arrears) வைத்துள்ள மாணவர்கள் எதிர்வரும் ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 பருவ தேர்வுகளின் போது, தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு (Grace Chance) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார தேவையை அறிந்து அரசின் அனைத்து துறைகளின் சார்ப...