இந்தியா, மார்ச் 26 -- பாலக் சன்னா கிரேவிக்கு ஃபிரஷ்ஷான கீரைகளை மட்டும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அது அதிக சுவை கொண்டதாக இருக்கும். இதற்கு வெங்காயம் மற்றும் தக்காளி மசாலா கூடுதல் சுவையைத்தரும். பாலக்கீரையை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இதுபோல் சன்னாவுடன் சேர்த்து செய்துகொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். பாலக்கீரையை நன்றாக ஊறவைத்து அலசி எடுக்கவேண்டும். எந்த கீரையை நீங்கள் அலசும்போதும் நிறம் மாறும் அதைத் தடுக்க தண்ணீரில் பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை சேர்த்து கரைத்து அந்த நீரில் கரைத்து அதில் ஊறவைத்து அலசி எடுக்கும்போது, கீரையும் சுத்தமாகும். நிறமும் மாறாது. அந்த நீரில் தேவைப்பட்டால் மஞ்சளும் சேர்த்துக்கொள்ளலாம். பாலக்கீரை மசாலாவின் நிறம் நல்ல பசுமையான நிறத்தில் இருக்கவேண்டும் என்றால், நீங்கள் கொஞ்சம் கீரையை ...