இந்தியா, மார்ச் 1 -- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தன்னுடைய 72 வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு நடிகர் பார்த்திபன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் இன்ஸ்டாபதிவில்,

'நான் தமிழை சுவாசிப்பதால் கலைஞரை பெரிதும் நேசிப்பவன். மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. அவர்களுக்கு திருமகனாய் பிறந்த,

தமிழகத்தின் பெருமகனாய் சிறந்த, நமது முதல்வர் அவர்களின் பிறந்த, நாளுக்கு ஒரு குடிமகனாய் என் வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் இதன் வழி தெரிவிப்பதை சிறப்பென நினைக்கிறேன்.

சிறப்பு வழியில் கரை கடந்த கூட்டமாய் கரைவேட்டிகள் அணிவகுக்கும் என்பதால்.. அவர்களின் அன்புக்கு குறுக்கீடு எதற்கு?' என்று அவர் அதில் பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க | ஸ்ரீதேவியை திருமணம் செய்ய விரும்பிய ரஜினிகாந்த்.. காதலை சொல்...