இந்தியா, ஏப்ரல் 6 -- ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு நகரம், 21ஆம் நூற்றாண்டின் பொறியியல் அற்புதத்தால் இன்று இணைக்கப்பட்டு உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

வணக்கம்! என் தமிழ் சொந்தங்களே! நண்பர்களே இன்று புனிதமான ஸ்ரீ ராமநவமி நன்நாள். சில காலம் முன்புதான் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் ஆலயத்தில் ராமர் சிலை மீது சூரியக் கதிர்கள் அற்புதமான திலகத்தை பொழிந்தன. பகவான் ஸ்ரீ ராமனின் வாழ்கை, அவரது ஆட்சியில் இருந்து கிடைக்கும் நல் ஆளுகை குறித்த உத்வேகம், தேசத்தை நிர்மாணிப்பதில் பெரிய ஆதாரமாக உள்ளது. இன்று ராமநவமியாக உள்ளதால் என்னுடன் அனைவரும் முழங்குங்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று.

தமிழ்நாட்டின் சங்க இலக்கியங்களிலும் கூட ஸ்ரீராமபிரானை பற்றி கூடப்பட்டு உள்ளது. ராமேஸ்வரத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் ராமநவமியையொட்டி என் இதயபூர்வ நல் வாழ்த...