இந்தியா, ஏப்ரல் 11 -- ஸ்வீட் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு சாப்பாடு இல்லாவிட்டால் கூட பரவாயில்லை இதுபோல் வித்யாசமான ஸ்னாக்ஸ்களை செய்து கொடுத்துவிட்டால் மகிழ்ச்சியாகிவிடுவார்கள். கோடை விடுமுறையும் வரப்போகிறது. இந்த நேரத்தில் குழந்தைகள் வீட்டில் இருப்பார்கள். அவர்கள் விரும்பும் ஸ்னாக்ஸ் ரெசிபிக்களை வீட்டிலே செய்து கொடுக்கலாம். அதை செய்யும்போது அவர்களையும் செய்ய தூண்டினால், அவர்கள் மகிழ்ச்சியுடன் செய்வார்கள். அவர்களுக்கும் நேரம் கழிந்ததுபோல் இருக்கும். இதுபோன்ற ஈசியான ரெசிபிக்களை அவர்களை செய்ய வைப்பதும் எளிது. அவர்கள் செய்து அந்த ரெசிபி நன்றாக வந்தால், அவர்களுக்கும் ஏதோ சாதித்துவிட்ட மகிழ்ச்சியும் கிடைக்கும். இந்த ஈசி ரெசிபியை செய்வது எப்படி என்று பாருங்கள். இது ஒரு பெங்காலி ரெசிபிய...