Chennai, ஏப்ரல் 20 -- பானு சப்தமி 2025: இந்து நாட்காட்டியின்படி, ஏப்ரல் 20ஆம் தேதியான இன்றைய சப்தமி திதி, 'பானு சப்தமி' என்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண பக்ஷத்தின் சப்தமி திதி, பானு சப்தமி என அழைக்கப்படுகிறது.

இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவதன் மூலம், குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிலைபெறும் என நம்பப்படுகிறது. பானு சப்தமி நாளில், சூரிய கடவுளை வழிபடுவது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

பானு சப்தமி நாளில் சூரிய கடவுளை வழிபடுவதன் மூலம், ஒரு நபரின் அனைத்து செயல்களும் வெற்றி பெறுவதாகவும், மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான கதவுகள் திறக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. ஒருவர் தனது வாழ்க்கையில் ஏதேனும் பிரச்னையை எதிர்கொண்டால், பானு சப்தமி நாளில் சூரிய கடவுளை வழிபடுவது நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. பானு சப்தமி விரதத்த...