இந்தியா, ஏப்ரல் 9 -- கோடைக்காலம் துவங்கிவிட்டது. உடலை குளிர்ச்சியாகவும், நீர்ச்சத்துக்களுடனும் வைத்துக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். அதில் ஒரு வழியென்றால், நீங்கள் அதற்கு பாதாம் பிசினை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட தாவரத்தில் இருந்து கிடைப்பது ஆகும் என்பதால் இது உங்கள் உடலுக்கு இயற்கை குளிரூட்டியாகிறது. அதன் குளிரூட்டும், நீர்ச்சத்துக்களைக் கொடுக்கும் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்றாகும். இது உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. ஆற்றலை மேம்படுத்துகிறது. சக்தியையும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. இது வீக்கத்தைக் குறைக்கிறது. இது உடலை குளுமையாக்குகிறது. சருமக்கோளாறுகளைப் போக்குகிறது. பித்தத்தால் உடலில் உள்ள சூட்டைக் குறைக்கிறது....