இந்தியா, ஏப்ரல் 29 -- மக்களின் பாதுகாப்புக்கு உத்ரவாதம் கொடுப்பது அரசின் கடமையாகும். ஆனால் பாதசாரிகளின் நலன் என்று வரும்போது சென்னை மிக மோசமான நிலையில் உள்ளது. சென்னையில்தான் இந்தியாவிலேயே வானங்களின் அடர்த்தி அதிகம் உள்ளது. ஒரு கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலையில் 2,093 வாகனங்கள் உள்ளது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அப்படி இருக்கும்போது பாதசாரிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. 1.2 மீட்டர் இடைவெளியில் பாதசாரிகளின் நடைபாதை இருக்கவேண்டும். ஆனால் பெரம்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் சில இடங்களில் ஒரு மீட்டருக்கு குறைவாகவும் அல்லது வேறு சில இடங்களில் 1.2 மீட்டருக்கு அதிகமாகவும் உள்ளது. இப்படி இருந்தால் மக்களின் பயன்பாட்டுக்கு பொருந்தி வராது.

மக்கள் தங்களுக்கு உரித்தான நடைபாதையில் செல்லாமல் சாலையில் நடக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது...