இந்தியா, ஏப்ரல் 12 -- தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் புதிய பாஜக மாநிலத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் பெயர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பாஜக மாநிலத் தலைவராக தேர்வாகி உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சான்றிதழ், துண்டு, பிரசாதம் ஆகியவற்றை கிஷண் ரெட்டி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். எல்.முருகன், தமிழிசை சௌந்தராஜன், வானதி ஸ்ரீனிவாசன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், கரு.நாகராஜன், ஏ.ஜி.சம்பத் ஆகியோருக்கும் தேசிய பொதுக்குழுவில் இடம் அளிக்கப்பட்டு உள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான வ...