நாசிக்,டெல்லி,சென்னை, ஏப்ரல் 19 -- பாஜகவின் புதிய தலைவர் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம். ஏப்ரல் மாத இறுதிக்குள் ஜே.பி. நட்டாவிற்குப் பதிலாக புதிய தலைவரின் பெயர் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பாஜக வட்டாரங்கள் கூறுகையில், மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக மனோகர் லால் கட்டர் பெயரும் தலைவர் பதவிப் போட்டியில் உள்ளது. அதேபோல் மோடி அரசின் அமைச்சர்களான தர்மேந்திர பிரதான் மற்றும் பூபேந்திர யாதவ் ஆகியோரின் பெயர்களும் சூடாகப் பேசப்படுகிறது.

மேலும் படிக்க | இந்தியாவின் முதல் 10 சிறந்த ஐஐடிகள் பட்டியல் - சென்னை ஐ.ஐ.டிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

இந்த மூன்று தலைவர்களில் ஒருவருக்கு தலைவர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தலைவர் பதவி குறித்த முடிவை எடுப்பதற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ்-ன் ...