இந்தியா, ஏப்ரல் 17 -- தனித்தே ஆட்சி அமைக்கும்" என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்று அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும் எம்.பி.யுமான தம்பிதுரை தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை திராவிடக் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைத்ததில்லை, இனிமேலும் அப்படி நடக்காது என்று வெளிப்படையாக அறிவித்தார். மேலும், இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரே கட்சி அதிமுக என்றும், பாஜகவுடனான கூட்டணி இஸ்லாமிய மக்களின் ஆதரவைப் பாதிக்காது என்றும் உறுதியாகக் கூறினார்.

தம்பிதுரை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் (NDA) அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்ததற்கு பதிலளித்...