இந்தியா, மார்ச் 20 -- மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்தவெளி வாகனத்தில் வந்து கலந்து கொண்டு பேசினார்.

இக்கூட்டத்தில் பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமாக தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேக தலைவர் பாரிவேந்தர், தமமுக தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி சண்முகம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி திமுக குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், "இந்து மதத்தை தாக்கும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேறு மதம் குறித்து பேசுவதே இல்லை. தமிழ்நாட்டின் கலாச்சாரமான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிருவ திமுக-காங்கிரஸ் கூட்டணி எதிர்ப்பு தெ...