இந்தியா, மே 5 -- டூரிஸ்ட் ஃபேமிலி படமானது கடந்த மே 1ம் தேதி வெளியானது. இந்தத்திரைப்படம் முதல் 3 நாட்களில் 6.20 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய தினம் படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.

பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை வெளியிடும் sacnilk தளம் வெளியிட்ட தகவல்களின் படி, டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியான அன்றைய தினம் 2 கோடி வசூல் செய்த நிலையில், அடுத்த நாள் 1.7 கோடி வசூல் செய்தது. 3 நாளான சனிக்கிழமை 2.5 கோடி வசூல் செய்த இந்தத்திரைப்படம் நான்காவது நாளான நேற்று 3.50 கோடி வசூல் செய்திருக்கிறது. மொத்தமாக பார்க்கும் போது டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் இது வரை 9.70 கோடி வசூல் செய்து இருக்கிறது.

மேலும் படிக்க:| 'அனிமல் நீண்ட நேரப்படமாக இருந்தது.. சந்தீப் எடிட் வேண்டாம் என்றார்.. படத...