இந்தியா, மார்ச் 26 -- பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 26 எபிசோட்: இனியா, பாக்யா, எழில் மூவரும் வீட்டுக்கு வந்ததும், ஈஸ்வரி மற்றும் கோபி அவர்களை நிற்க வைத்து இனியாவிடம் எங்கே போய்ட்டு வர என்று கேட்கிறார்கள். ரெஸ்டாரண்டுக்கு என்று சொல்ல, அதுக்கு முன்னாடி எங்க போயிருந்த என்று கேட்கிறான் கோபி. இனியாவும் ஆகாஷ் எக்ஸாம் எழுத போனான். அதான் வாழ்த்த போனேன் என்கிறாள். இதைக்கேட்ட ஈஸ்வரி, கோபி கடும் கோபம் அடைகின்றனர்.

பின்னர் இருவரும் இனியாவை திட்ட, நான்தான் அவளை கூட்டிட்டு போனேன் என் கூறுகிறான் எழில். அப்போது கோபி, அவ சொன்னா, நீ அவளுக்கு புத்திமதி சொல்லி இருக்கணும். எதுக்கு அவளை அங்க கூட்டிட்டு போகணும். ஒரு அண்ணனா நடந்துக்க மாட்டீயா என்கிறான். இந்த சமயத்தில் பாக்யா பக்கமாக திரும்பும் ஈஸ்வரி, நீ என்ன சிலை மாதிரி நிக்குற. உனக்கு இதெல்லாம் தெரியுமா என்று...