இந்தியா, மார்ச் 19 -- பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 19 எபிசோட்: பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா, தன் வீட்டில் வேலை செய்யும் செல்வியின் மகன் ஆகாஷை காதலித்தை ஏற்றுக்கொள்ள முடியாத பாக்கியா, தூரத்து சொந்தத்தை இனியாவை பெண் பார்க்க அழைத்து வந்தாள். அவர்களுக்கும் இனியாவை பிடித்துப் போனதால், நாளைக்கே திருமண நிச்சயதார்த்தத்தை நடத்த வேண்டும் என ஈஸ்வரி முடிவெடுத்துவிட்டாள்.

மேலும் படிக்க: ஈஸ்வரியின் திட்டத்தால் வெடித்த பாக்கியா.. கலங்கும் இனியா.. பாக்கியலட்சுமி சீரியல்

வெளியாட்கள் முன் எதுவும் பேசவேண்டாம் என நினைத்த குடும்பத்தினர் அனைவரும் அவர்கள் சென்றவுடன் ஈஸ்வரியிடம் சண்டைக்கு நின்றனர். பாக்கியா, செழியன், எழில், ஜெனி, அமிர்தா என ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதை கொஞ்சம் கூட காதில் வாங்காத ஈஸ்வரி தனக்கு தோன்றியதை தான் செய்வே...