இந்தியா, மார்ச் 18 -- பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 18 எபிசோட்: பாக்கியலட்சுமி சீரியலில், இனியா தன் வீட்டில் வேலை செய்யும் செல்வியின் மகனை காதலித்ததை பொறுத்துக் கொள்ள முடியாத ஈஸ்வரி, தன் தகுதிக்கு ஏற்ற தூரத்து சொந்தங்களிடம் பேசி, இனியாவிற்கு ஒரு வரனை பிடித்துள்ளார். அவர்கள் இனியாவை பெண் பார்க்க வருவதை வீட்டில் இருப்பவர்கள் தெரிந்து கொண்டால், தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் என நினைத்து யாரிடமும் கலந்து பேசாமலே இந்த முடிவை எடுக்கிறார்.

மேலும் படிக்க: இன்னைக்கு டிவியில என்னென்ன படங்கள் போடப்போறாங்கன்னு தெரியுமா? லிஸ்ட் இதோ..

அம்மாவின் திட்டத்தில் ஏதோ ஒன்று இறுப்பதை அறிந்த கோபி, ஈஸ்வரியிடம் சென்று விசாரிக்க மொத்த திட்டத்தையும் போட்டு உடைக்கிறார். ஆரம்பத்தில் ஈஸ்வரி சொல்வதில் உடன்பாடு இல்லாமல் இருந்த கோபி, உனக்கு செல்வியின் பையன் மருமகனா இருக்...