இந்தியா, மார்ச் 15 -- பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 15 எபிசோட்: பாக்கியலட்சுமி சீரியலில், செழியனாலும், கோபியாலும் அடிபட்டு கிடக்கும் செல்வியின் மகனுக்கு வைத்தியம் பார்க்க கூட செல்வியிடம் காசு இல்லை. இதனால், பாக்கியாவிடம் கொடுத்திருக்கும் தன்னுடைய நகைகளை வாங்க பாக்கியா வீட்டிற்கு வந்தாள் செல்வி.

இத்தனை அசிங்கப்படுத்திய பிறகும் இந்த வீட்டிற்குள் வரும் செல்வியை ஈஸ்வரியும் கோபியும் வாய்க்கு வந்த படி பேசுகின்றனர். இதனால், கலங்கும் செல்வி, நான் மரியாதை தராத இந்த வீட்டிற்கு வரணும்ன்னு நினைக்கல. என்னோட நகையை வாங்க வந்தேன் என சொல்கிறாள். நகையோடு இவ பொருள் என்ன இருக்கோ அதை எல்லாம் கொடுத்துடு திரும்ப அவ இந்த வீட்டுக்கு வரவே கூடாதுன்னு ஈஸ்வரி மேலும் அசிங்கப்படுத்துகிறாள். இதை எல்லாம் கேட்டு பாக்கியா மிகவும் வருத்தப்படுகிறாள்.

மேலும் படிக்க: சிதறிய ...