இந்தியா, மார்ச் 8 -- பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 06 எபிசோட் : பாக்கியலட்சுமி சீரியலில், இனியா குடும்பத்தோடு ஒட்டாமல் போனையே பார்த்துக் கொண்டிருப்பதால் சில நாட்களாகவே கோபிக்கு சந்தேகம் வந்த நிலையில், இனியா ஆகாஷூடன்போனில் பேசியது கோபிக்கு தெரிய வருகிறது. இதனால், கோபி வலுக்கட்டாயமாக இனியாவை காலேஜ்ஜிற்கு கூட்டிச் செல்ல, இனியா பாதியிலே இறங்கிக் கொள்கிறாள்.

உண்மையை உடைத்த கோபி

இதனால், கோபியின் சந்தேகம் மேலும் அதிகரித்து இனியாவை ஃபாலோ செய்து சென்றதில் தன்னை ஏமாற்றி ஆகாஷை சந்திக்க வந்தது தெரிந்தது. பின் இனியாவை கோவத்தோடு அழைத்து வந்து, பாக்கியாவிடம் கோபி மொத்த உண்மையையும் கூறினான்.

மேலும், நம்ம வீட்டை கூட்டி பெருக்கி, கழுவுகிறவளோட பையன தான் நம்ம பொன்னு காதலிக்கிறா என கத்துகிறான். இதைக் கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போக, அந்த சம...