இந்தியா, பிப்ரவரி 27 -- பாக்கியலட்சுமி சீரியல் பிப்ரவரி 27 எபிசோட் : பாக்யாவுக்கும் கோபிக்கும் மீண்டும் திருமணம் செய்து வைக்கப் போவதாக, பாக்யா பிறந்தநாளில் தான் அறிவித்ததை, பாக்யா நிராகரித்த ஆத்திரத்தில் வீட்டில் இருக்கிறார் ஈஸ்வரி. அப்போது அங்கு வரும் கோபி, ஈஸ்வரியிடம் பேசுகிறார். 'அவ ரொம்ப மாறிட்டா.. அவளுக்கு இப்போ பணம் வந்துடுச்சு, நிறைய பழக்கம் வந்துடுச்சு, இப்போ அவ மாறிட்டா. அவ என் பேச்சை தூக்கி எரிஞ்சு பேசுறா' என்று ஆக்ரோஷமாக மகனிடம் பேசுகிறாள் ஈஸ்வரி. 'இல்லம்மா.. தப்புமா.. பாக்யாவை நீங்க அப்படி பேசக்கூடாது. அவ வாழ்க்கையை அவ தான் முடிவு பண்ணனும், அவ தெளிவா இருக்கா.. என் கூட வாழ அவளுக்கு விருப்பம் இல்லை. அவளை கேட்காமல், நீங்கள் அப்படி பேசியிருக்க கூடாது' என்று தன் அம்மாவிடம் விளக்கிவிட்டு, வீட்டு ஹாலுக்குச் செல்கிறார் கோபி....