இந்தியா, ஏப்ரல் 4 -- பாக்கியலட்சுமி சீரியல் ஏப்ரல் 4 எபிசோட்: பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியாவிற்கு எப்படியாவது சுதாகரின் மகனை கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருக்கிறார்கள் ஈஸ்வரி. கோபி, செழியன் ஆகிய 3 பேரும். ஆனால், இனியா தன் மனதில் இப்போதும் ஆகாஷ் தான் இருப்பதாக அழுத்தம் திருத்தமாக கூறியதும் அனைவரும் இனியாவிடம் சண்டைக்கு வந்தனர். ஆகாஷால் நீ நினைக்கும் வாழ்க்கையை கொடுக்க முடியாது எனக் கூறி இந்தக் கல்யாணம் நிச்சயம் நடக்கும் என பிடிவாதமாக கூறினர்.

மேலும் படிக்க| உயிருக்கு ஆபத்தான நிலையில் விசாலாட்சி.. எதிர்நீச்சல் சீரியல்

இதனால், மனம் வருந்திய இனியாவிற்கு பாக்கியா ஆறுதல் சொன்னாள். உன் வாழ்க்கை இது. நான் ஆகாஷையும் கல்யாணம் பண்ணிக்க சொல்லல, சுதாகர் பையனையும் கல்யாணம் பண்ண சொல்லல. இப்போதைக்கு படி, வேலைக்கு போ என கூற...