இந்தியா, மே 10 -- புதுடில்லி: ராணுவ உள்கட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது, போர் விமானங்கள், ஆளில்லா போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) இன்றைய தினம் ( சனிக்கிழமை) பாகிஸ்தானில் உள்ள எட்டு ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது.

இது குறித்து அதிகாரிகள் அளித்த விளக்கம் பின்வருமாறு:-

"சனிக்கிழமை அதிகாலை இந்திய ராணுவம் சார்பில் தொடுக்கப்பட்ட இராணுவத் தாக்குதல்கள் ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மக்களை குறி வைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி என்று கூறினார் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி!

மேலும் படிக்க | ஆப்ரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவம் குறித்து பேஸ்புக்கில் அவதூறு! வழக்கில் சிக்கிய சிறுத்...