இந்தியா, மார்ச் 9 -- பாகற்காய் கசப்பு சுவை உடையது. இது உடல் நலத்துக்கு உகந்த உணவாகக் கருதப்படுகிறது. இதற்கு மருத்துவப் பயன்களும் உண்டு. பாகற்காயின் இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் கொண்டதாக கருதப்படுகிறது. இதனை பொறித்தோ, வறுத்தோ, குழம்பாகவோ சாப்பிடுவது வழக்கம். இதனை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு இதனை தவறாமல் கொடுக்க வேண்டும். ஆனால் இதனை பெரும்பாலான குழந்தைகள் விரும்புவதில்லை. இதனை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் புழுக்கள் பிரச்சனை தீரும். இதனை காய்கறியாக கொடுக்காமல் பொடியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பாகற்காய் பொடியை சூடான சாதம், இட்லி மற்றும் தோசை என பல விதமான உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.

மேலும் படிக்க |...